நடிகை பலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றத்தை மாற்ற கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை கேரள உயர்  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த 3 வருடங்களுக்கு முன் மலையாள நடிகை கடத்தி பலாத்காரம்  செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று  வருகிறது. ஒரு பெண் நீதிபதி தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து  வருவதால் நீதிமன்றத்தை மாற்றவேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட நடிகை  தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசுத்  தரப்பு சார்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் தொடக்கம் முதலே குற்றம் சாட்டப்பட்டவர்கள்  தரப்புக்கு  ஆதரவாக நீதிபதி செயல்பட்டு வருவதாகவும், குற்றம்  சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மோசமான கேள்விகளை  கேட்டதால் நீதிமன்றத்தில் வைத்து பலமுறை நடிகை அழும் சூழ்நிலை ஏற்பட்டது  என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் 20ம் தேதி  (நேற்று) வரை விசாரணையை  நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக 20ம் தேதி  தீர்ப்பளிப்பதாகவும் கூறியது. அதன்படி நேற்று இந்த மனுக்களை விசாரித்த  நீதிபதி அருண், விசாரணை நீதிமன்றத்தை மாற்ற முடியாது என்று கூறி மனுக்களை  தள்ளுபடி செய்தார். விசாரணை  நீதிமன்றத்தை மாற்றினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று கூறிய  நீதிபதி, வரும்  23ம் தேதி முதல் விசாரணையை மீண்டும் தொடங்க அனுமதி அளித்து  உத்தரவிட்டார்.

Related Stories: