நபார்டு வங்கி மூலம் குறு விவசாயிகள் கடன்பெற தமிழகத்திற்கு 1,357 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நபார்டு வங்கி நிர்வாகத்தின் மூலம் குறு விவசாயிகள் பயன்பெற தமிழகத்திற்கு மட்டும் 1,357கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் நேற்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மத்திய அரசின் நேற்றைய அறிவிப்பில், ‘‘நாடு முழுவதிலும் உள்ள குறு தொழில் செய்பவர்களுக்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் கடன் வாங்கி பயன்பறுவதற்காக குஜராத், ஆந்திரா, மேற்கு வங்கம், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு தொகை ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 தமிழகத்திற்கு மட்டும் 1,357கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறு விவசாயிகள் தங்களது விவசாயத்தை பெருக்கவும், அதற்கான உபகரணங்களை வாங்கி பொருத்திக்கொள்ளவும் முடியும். இது முழுவதுமாக நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் மட்டுமே செயல்படுத்தப்படும். 2019-20ம் ஆண்டில் குறு விவசாயிகள் நபார்டு வங்கி மூலம் கடன் பெறுவதற்காக மொத்தம் 5 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: