கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை விடிய விடிய விரட்டியடிப்பு செய்து மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்தியது. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால் பகல் நேரத்தில் மீன்பிடிக்க முடியாமல் தவித்த மீனவர்கள் இரவு நேரத்தில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து பெரும் நஷ்டத்துடன் இன்று காலை கரை திரும்பினர். பெரிய ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை கற்களை வீசியும், மீன்பிடி வலைகளை வெட்டி வீசியும் விரட்டியடிப்பு செய்தனர் என மீனவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: