கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல், நீக்கல் போன்றவை குறித்தும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வாக்காளர் விழிப்புணர்வு பைக்பேரணி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.