வால்பாறையில் தேயிலை மகசூல் அதிகரிப்பு

வால்பாறை: வால்பாறை பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் அளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதில் இளம் துளிர்கள் மூலம் தயாரிக்கப்படும் தேயிலை சுவை அதிகமாக இருக்கும். தேயிலை செடிகள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர்ந்தால், தரமான டீ தூள் தயாரிக்க முடியாது. இதனால், தேயிலை செடிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெட்டி (கவாத்து) விடுவது வழக்கம். வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் தேயிலை செடிகளை கவாத்து செய்திருந்தனர். தற்போது செடிகள் துளிர்விட துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது நிலவும் வெயில், சாரல் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. உற்பத்தி அதிகரிப்பால், தேயிலை விலை கிலோ ரூ.40 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: