இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்த தேவாங் காந்தி (கிழக்குமண்டலம்), சரண்தீப் சிங்(வடக்கு), ஜடின் பரஞ்ச்பே ஆகியோரின் பதவிக்காலம் முடிந்துள்ளது. இதையடுத்து காலியாக உள்ள இந்த 3 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதன்படி காலியாக  உள்ள 3 இடங்களுக்கு முன்னாள்வீரர்கள் அஜித் அகர்கர், மணீந்தர்சிங், சேதன் சர்மா, சிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் மின்அஞ்சல் மூலம் விணப்பித்துள்ளனர். இவர்களை தவிர அபே குருவில்லா, ரணதேப் போஸ் ஆகியோரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

தற்போது தேர்வு குழு தலைவராக கர்நாடகத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி உள்ளார். மண்டலக் கொள்கையின் படி பி.சி.சி.ஐ முடிவு செய்தால், ஜோஷிக்கு பதிலாக குழுவின் தலைவராக அகர்கர் மற்றும் மனிந்தர் ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. லோதா பரிந்துரையின்படி அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களுக்குதான் தேர்வு குழு தலைவர் பதவியில் முன்னுரிமை வழங்கப்படும். அகர்கர் 231 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். சுனில் ஜோஷி 15 டெஸ்ட், 69 ஒருநாள் என 84 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனால் அஜித் அகர்கர் தேர்வுகுழு தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related Stories: