பக்தரின் இ-மெயிலுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம் தொலைக்காட்சி ஊழியர்கள்.: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து பக்தர் ஒருவரின் இ-மெயிலுக்கு ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக  திருப்பதி திருமலை தேவஸ்தானம் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. தேவஸ்தானம் விஜிலென்ஸ் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆபாச வீடியோ இணைப்பை அனுப்பிய ஊழியர் உள்பட மேலும் 5 ஊழியர்கள் ஆபாச வீடியோக்களை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து பணி நேரத்தில் 25 ஊழியர்கள் இதர வீடியோக்களை பார்த்ததும் கண்டுபிடித்துள்ளனர். இதனால் தேவஸ்தானம் விஜிலென்ஸ் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: