வெளிநாட்டு நிதி பெறுவோர் அரசுக்கு எதிராக போராட தடை: மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள், மாணவ சங்கங்கள் நிதியை பெற முடியாது. வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் அரசு மாற்றம் கொண்டு வந்தது. வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து 3 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நிதி பெற விரும்பும் அமைப்பு குறைந்தது ரூ.15 லட்சத்தை 3 ஆண்டில் நலத்திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும்.

Related Stories: