ரஷ்யாவில் இருந்து கொரோனா மருந்து மூலப்பொருள் ஐதராபாத் வந்தடைந்தது

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் ரெட்டீஸ் லேப் மருந்து தயாரிப்பு நிறுவனம் 30 கோடி டோஸ் அளவு கொரோனா தடுப்பு மருந்தை  இந்தியாவில் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டது.  

அதன்படி, சர்வதேச அளவில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ என்ற வேக்சின் மூலப்பொருள் கன்டெய்னர் மூலம் நேற்று ஐதராபாத் வந்தடைந்தது. இதன் மூலம் டாக்டர் ரெட்டீஸ் லேப், நாட்டிலேயே முதல்முறையாக கொரோனா தடுப்பு மருந்தை தயார் செய்ய உள்ளது.

Related Stories: