பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

விருதுநகர்: பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். புதிதாக அமையும் நலவாரியத்தால் 4 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் பேசியுள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் கருத்தின் அடிப்படையில் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது என சட்டத்தின் வாயிலாகவே அறிவுறுத்துகிறோம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டத்தை மீறுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை, பாரபட்சம் காட்டப்படாது என்று முதலவர் கூறியுள்ளார். அமைச்சர் துரைக்கண்ணு மரண அறிவிப்பில் மர்மம் எதுவும் இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார். பல நூறு கோடி ரூபாய் பதுக்கப்பட்டிருந்ததாக வெளியான செய்திகள் பற்றி மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். பணம் பதுக்கல் பற்றி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்கவில்லை.

Related Stories: