வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது; சூர்யகுமார் தனது விக்கெட்டை எனக்காக தியாகம் செய்தார்; ரோகித்சர்மா நெகிழ்ச்சி

துபாய்; மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது குறித்து அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது; இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வீரர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. இதைப்போல அணியின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் உதவியாக இருந்தார்கள். ஒட்டுமொத்த அணியாக இந்த வெற்றியை பெற்று இருக்கிறோம். சூர்யகுமார் யாதவ் முதிர்ச்சி அடைந்த வீரர். அவர் தனது விக்கெட்டை எனக்காக தியாகம் செய்தார். நான் ரன் அவுட் ஆவதை விரும்பாமல் அவர் ரன் அவுட் ஆகி தியாகத்தை வெளிப்படுத்தினார்.

அணிக்கு சமநிலை ஏற்படுத்துவதற்காகவே ஜெயந்த் யாதவ் இறுதிப்போட்டியில் சேர்க்கப்பட்டார். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார். தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் கூறியதாவது: நாங்கள் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தோம். இதனால் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த தொடர் மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே இறுதிப் போட்டிக்கு நுழைந்ததே மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால் கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். கோப்பையை கைப்பற்ற முயற்சிப்போம். எங்களது சிறப்பான செயல்பாட்டுக்கு பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் முக்கிய பங்கு வகித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: