கேரள தங்கம் கடத்தல் விவகாரம் மேலும் 5 பேர் மீது என்ஐஏ வழக்கு பதிவு: மொத்த எண்ணிக்கை 35 ஆக உயர்வு

திருவனந்தபுரம்:  திருவனந்தபுரம்   ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இதுவரை சொப்னா,  சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட 30  பேர் மீது என்ஐஏ வழக்குப்பதிவு  செய்துள்ளது. இந்நிலையில், மலப்புரத்தை சேர்ந்த முகமது அஸ்லாம் (44), அப்துல் லத்தீப் (47), நசருதீன் ஷா (32), ரம்சான் (36),  கோழிக்கோட்டை  சேர்ந்த முகமது மன்சூர் (35) ஆகிய மேலும் 5 பேர்  மீது என்ஐஏ  வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்களில் முகமது அஸ்லாம் தவிர மீதமுள்ள 4   பேரும் அமீரக நாடுகளில் உள்ளனர். இதையடுத்து, வழக்குப் பதிவு ெசய்யப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக   உயர்ந்துள்ளது. இவர்களில் 9 பேர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களை கைது  செய்ய, சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியை நாட என்ஐஏ  தீர்மானித்துள்ளது.

Related Stories: