வேல் யாத்திரையில் அத்துமீறல் பாஜ பிரமுகர் மீது 4 பிரிவில் வழக்கு

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து கடந்த 8ம் தேதி காலை 10.30 மணிக்கு வேல் யாத்திரை தொடங்கும் என பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க பாஜ மாநில தலைவர் எல்.முருகன் கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நிர்வாகிகளுடன் திருவொற்றியூர் புறப்பட்டார். அப்போது, ராயபுரம் கல்மண்டபம் வழியாக மத்திய சென்னை மாவட்ட பாஜ தலைவர் விஜய் ஆனந்த்தும் அங்கு வந்துள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்தபோது போலீசார் மீது மோதுவதுபோல் கார் ஓட்டியுள்ளார். இதுகுறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த முதல்நிலை காவலர் மணிகண்டன் ராயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்படி பாஜ மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் மீது பணியில் இருந்த காவலர்கள் மீது மோதுவதுபோல் கார் ஓட்டியது, அதிக சத்தம் எழுப்பியபடி கார் ஓட்டியது, சாலை ஓரத்தில் அனுமதியின்றி கொடி கட்டியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: