கர்தார்பூரில் அமைந்துள்ள குருத்வாரா நிர்வாக பொறுப்புமுஸ்லிம்களிடம் ஒப்படைப்பு: பாகிஸ்தான் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டம், கர்தார்பூரில் சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படும் கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 9ம் இந்த குருத்வாரா  திறக்கப்பட்டது. இதன் முதல் ஆண்டு விழாவை நடத்துவதற்காக அதனை நிர்வகித்து வரும்  பாகிஸ்தானின் சீக்கிய குருத்வாரா பிரபந்தாங் கமிட்டி திட்டமிட்டு இருந்தது.  இந்நிலையில், சீக்கிய கமிட்டியிடம் இருந்த, இந்த குருத்வாராவின் முழு நிர்வாக கட்டுப்பாட்டையும், பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் திடீரென பறித்தது, பின்னர், பாகிஸ்தான் மத விவகார அமைச்சகம், இ்ந்த நிர்வாக கட்டுப்பாட்டை ‘இவாக்யூ’ என்்ற இஸ்லாமிய அறக்கட்டளை வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது.

இந்த அறக்கட்டளை, பாகிஸ்தானில்  உள்ள இந்துக்கள், சீக்கியர்களின் மத சொத்துக்கள் மற்றும் கோயில்களை  நிர்வாகிக்கும் அமைப்பாகும். கடந்த 3ம் தேதி இது தொடர்பான அதிகாரப்பூர்வ  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை சீக்கியர்கள் இடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா கண்டனம்

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீக்கிய அமைப்பிடம் இருந்த கர்தார்பூர் சாகிப் குருத்வாரா நிர்வாகத்தை, இஸ்லாமிய அறக்கட்டளையிடம் பாகிஸ்தான் அரசு ஒப்படைத்தது கடும் கண்டனத்துக்குரியது. இது, சீக்கிய மக்களின் மத உணர்வுக்கு எதிரானது. பாகிஸ்தான் அரசின் உண்மையான முகத்தை இது பிரதிபலித்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: