செவிலிமேடு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர புதிய கிடங்கு: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க புதிதாக கட்டப்படும் பாதுகாப்பு கிடங்கை கலெக்டர் பார்வையிட்டார்.  செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணி (கட்டிடம்) துறை சார்பில் தேர்தலில் பயன்படுத்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க புதிய பாதுகாப்பு கிடங்கு கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகளுக்காக 7.5 கோடி ஒதுக்கீடு செய்து, 1949 சதுர மீட்டர் முழு பரப்பளவில் கிடங்கு கட்டப்பட்டுகிறது.

இதில் வாக்குப்பதிவு இயந்திரம், வாக்களிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள், வாக்கு கட்டுப்பாடு இயந்திரம் ஆகியவற்றை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வை்க்க தனித்தனியே தரை மற்றும் 2 தளங்களுடன் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த கிடங்கை, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, காஞ்சிபுரம் தாசில்தார் பவானி, தேர்தல் தாசில்தார் ரபிக், பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: