ஐபிஎல் டி20- 2020 குவாலிபையர் 1: பும்ரா, போல்ட் பந்துவீச்சில் சுருண்ட டெல்லி அணி; இறுதி போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி

துபாய்: ஐபிஎல் டி20- 2020 குவாலிபையர் 1-ல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. இதனால் தோல்வி அடைந்த டெல்லி அணி நாளை நடைபெறும் எலிமினேட்டரில் வெற்றி பெரும் அணியுடன் மோத உள்ளது.

மும்பை அணி தொடக்கத்தில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ரன்களின்றி வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் டி காக் சிறப்பாக விளையாடினர். மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன்-55, சூர்யகுமார் யாதவ் 51, டிகாக் 40 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 37 ரன்களை விளாசினார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்க முதல் விக்கெட்டுகள் மள மளவென விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட்டுகள் ஒரு பக்கம் சரிந்த நிலையிலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி டெல்லி அணியை சற்று எழுச்சி பெற செய்தனர்.

Related Stories: