வாடகைதாரர்கள் விவரங்களை உடனே சமர்ப்பிக்க வேண்டும்: குடியிருப்பு உரிமையாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள வாடகைதாரர்களின் விவரங்களை உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கொள்ளை, திருட்டு, கொலை சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதால் இதனை தடுக்கும் வகையில் சென்னையில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய முழு விவரங்களை புகைப்படத்துடன் கூடிய உரிய படிவத்துடன், குடியிருப்பின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்களது வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் வழங்குமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே, குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காணவும், வரும் டிசம்பர் 29ம் தேதிக்குள் வாடகைதாரர்களின் விவரங்களை அந்தந்த காவல் நிலையங்களில் குடியிருப்பு உரிமையாளர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: