அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று நடக்கும் 50வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் 12 போட்டியில் 6ல் வென்றுள்ளது. கடைசியாக ஆடிய 5 போட்டிகளிலும் வென்று சூப்பர் பார்மில் உள்ளது. இன்று வெற்றி பெற்று பிளேஆப் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள போராடும். மறுபுறம் ராஜஸ்தான் 12 போட்டியில் 5ல் வென்றுள்ளது. ரன்ரேட்டும் குறைவாக உள்ளதால் எஞ்சிய 2 போட்டியிலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே பிளே ஆப் வாய்ப்பு உள்ளது.