ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் கே.எல்.ராகுல், முகமது சிராஜ்

மும்பை: நவம்பரில் ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கே.எல்.ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி, நவம்பரில் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட் டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் ஆடவுள்ளது. இந்த 3 தொடர்களுக்கான 28 வீரர்கள் அடங்கிய இந்திய அணி, நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ரோஹித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 18 வீரர்கள் கொண்ட டெஸ்ட் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டி20 தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக ஸ்பின் பவுலர் வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்த அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளனர். 3 தொடர்களுக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி நீடிக்கிறார். டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாக அஜிங்யா ரஹானேவும், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: