மண்டல, மகரவிளக்கு காலத்தில் தபாலில் சபரிமலை பிரசாதம்: தபால் துறை, தேவசம் போர்டு ஏற்பாடு

திருவனந்தபுரம்: மண்டல கால, மகரவிளக்கு பூஜைகளின்போது சபரிமலை செல்ல முடியாத பக்தர்களுக்கு தபால் மூலம் பிரசாதம் அனுப்ப ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. மண்டல கால மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது.  கொரோனாவால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், சபரிமலை செல்ல முடியாத பக்தர்களுக்காக தேவசம் போர்டு, தபால்துறை இணைந்து ஒரு  புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளன. இதன் மூலம், வீட்டில் இருந்தே சபரிமலை பிரசாதத்தை பக்தர்கள் பெற முடியும்.

இந்தியாவில் உள்ள பக்தர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகம் மூலம் சபரிமலை பிரசாதத்தை முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்திய 2 அல்லது 3  நாட்களுக்குள் பிரசாதம் தபால் மூலம் வீட்டுக்கு வந்து சேரும். அரவணை, நெய், விபூதி, மஞ்சள் மற்றும் குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் பேக்கில்  அடைத்து பார்சலில் அனுப்பி வைக்கப்படும்.

Related Stories: