காஞ்சிபுரம் கோயிலில் தமிழில் வழிபாடு செய்ய முயன்றவர் கீழ் தள்ளப்பட்டதால் சலசலப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோயிலில் தமிழில் திவ்ய பிரபந்தம் பாட முயன்றவர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகளின் உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழில் திவ்ய பிரபந்தம் பாட முயன்றவர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

வரதராஜ பெருமாள் கோயிலில் இந்த ஆண்டு எளிமையான முறையில் மணவாள மாமுனிகளின் உற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் 10 - ஆம் நாளான நேற்றிரவு சாற்றுமுறை விழாவும் நடைபெற்றது. அதில் மணவாள மாமுனிவர் சன்னதியில் சமத்துவ வழிபாடு நடத்த வலியுறுத்தினார். மேலும் இந்து அறநிலைத் துறை ஆணையர் உத்தரவை நடைமுறைப்படுத்த அவர்கள் வலியுறுத்தி, திவ்ய பிரபந்த பாடல்களை தமிழில் பாட முயன்றுள்ளனர்.  

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் திவ்ய பிரபந்தம் பாட முயன்ற திருமாலடியார் மாதவ ராமனுஜ தாசனை தென்கலையைச் சார்ந்தவர்கள் கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக போலீசார் கோயில் உள்ளே நுழைந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: