தொழிலாளர்களுக்கு ஊதியம் தருவதில் ரூ.60 கோடி முறைகேடு.: வைப்பு நிதியை கொள்ளையடிப்பதாக குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ரூ.60 கோடி வரை அதிகாரிகள் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச்செயலாளர் ஆத்மநாபன்; தமிழக அளவில் குடிநீர் வடிகால் வாரியத்தில் சுமார் 6,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக கூறினார்.

மேலும் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதிய தொகை தருவதில் அதிகாரிகள் முறைகேடு செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். அதனைத்தொடர்ந்து தொழிலாளர்களின் வைப்பு நிதி கொள்ளை அடிக்கப்படுவதாக சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து தீபாவளி பண்டிகை நாளில் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

Related Stories: