சம்பளம் போதவில்லை பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் விலகலா? பழைய பணிக்கே திரும்ப திட்டம்

லண்டன்: பிரதமர் பதவி மூலம் கிடைக்கும் சம்பளம், குடும்பம் நடத்த போதவில்லை என்பதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி  விலகப் போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இங்கிலாந்தின் பிரதமராக பதவி வகிக்கும் போரிஸ் ஜான்சன் தற்போது  ஆண்டிற்கு 1 லட்சத்து 50,402 யூரோ அதாவது, இந்திய மதிப்பின்படி ரூ.1 கோடியே 30 லட்சத்து 21,014 சம்பளம் வாங்குகிறார். அந்த சம்பளம், அவரது  முந்தைய பணியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாக இருப்பதாக இங்கிலாந்து செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், டோரி கட்சி எம்.பி. ஒருவர் கூறுகையில், ‘‘போரிஸ் ஜான்சனுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

அதோடு, விவாகரத்தான முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியுள்ளது. இதனால், கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறார். எனவே அடுத்த 6  மாதத்தில் பதவி விலக தீர்மானித்துள்ளார்’’ என கூறி உள்ளார். எம்பியாக போரிஸ் தேர்வு செய்யப்படுவதற்கு முன், பிரபல பத்திரிகை ஒன்றில்  போரிஸ் பணியாற்றி வந்தார். அதில் கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ.4 கோடி சம்பாதித்துள்ளார். இதனால் தனது முந்தைய பத்திரிகை பணிக்கே போரிஸ்  திரும்பப் போவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: