அம்மன் கோயில் பூட்டை உடைத்து கொள்ளை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகோலாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஊரடங்கு தளர்வு முடிந்து அண்மையில் திறக்கப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் காலை, மாலை அம்மனை வழிபட்டு வந்தனர். கோயிலில் அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (45) என்பவர் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி ஏழுமலை பூஜை முடிந்தபின் கோயிலை பூட்டிவிட்டு சென்றார். வழக்கம் போல் நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது கோயில் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு  வந்த உத்திரமேரூர் போலீசார் கோயில் உள்ளே சென்று பார்த்தபோது கோயிலினுள் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் ரூ.10 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து உத்திரமேரூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: