கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு கேரளா வந்தார் ராகுல்காந்தி

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சுமார் 11.40 மணிக்கு கோழிக்கோடு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் மலப்புரம் மாவட்டம் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நிலச்சரிவால் வீடு இழந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்கினார். தொடர்ந்து மலப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று (20ம் தேதி) வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் உள்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

* பொருளாதாரத்தை அழிப்பது எப்படி?

ராகுல் காந்தி தனது நேற்றைய டிவிட்டர் பதிவில், ``ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழிப்பது எப்படி? பொதுமக்களில் எத்தனை பேரை அதிகபட்சமாக விரைவாக கொரோனா தொற்றுக்கு உள்ளாக்க முடியும்,’’ என்று கூறி, சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி விகித அட்டவணையை இணைத்துள்ளார். அதில், இந்தியா கடைசி இடத்தில் மைனஸ் 10.3 சதவீத ஜிடிபி வளர்ச்சியுடன் இடம் பெற்றுள்ளது.

Related Stories: