ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை

சார்ஜா: ஐபிஎல் டி20 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: