சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவிய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: அரபிக்கடலில் ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. லடாக் எல்லையில் சீனாவுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமீப காலமாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது தொடர்ந்து பல்வேறு வகையான ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒடிசாவின் பாலசூரில் கடந்த வாரம் நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது. இந்நிலையில், அரபிக்கடலில் கடற்படைக்கு சொந்தமான, ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க்கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை நேற்று ஏவப்பட்டது. ஒலியை விட வேகமாக பாயும் அது, இலக்கை துல்லியமாக தாக்கியது.

Related Stories: