சிவகாசியில் முதல்வர் திறந்து வைத்தும் செயல்பாட்டுக்கு வராத நகராட்சி புதிய கட்டிடம்

சிவகாசி: சிவகாசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி அலுவலகத்திற்கு காமராஜர் சிலை அருகே ஏற்கனவே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் சதுரஅடி பரப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் நகராட்சி கூட்ட மன்ற அரங்கம், ஆணையாளர் அலுவலகம், பொறியாளர் அலுவலகம், நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவகாசி நகராட்சி கட்டிடம் நகரின் மைய பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் இட நெருக்கடி ஏற்படுவதாக கூறி புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

புதிய கட்டிடம் சிவகாசி முதல் வார்டில் உள்ள ரத்தினம் நகர் பூங்கா அருகில் கட்டப்பட்டுள்ளது. நகராட்சி பொது நிதி ரூ.2 கோடி, நகராட்சி இடை நிரப்புதல் மற்றும் இயக்குதல் திட்ட நிதி ரூ.3 கோடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணி முடிந்ததையடுத்து கடந்த மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 8 மாதங்களுக்கு மேலான நிலையில் இதுவரை புதிய நகராட்சி அலுவலகம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் புதிய கட்டிடம் சேதமடைந்து வருகிறது. நகராட்சி புதிய கட்டிட அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: