கேகேஆர் கேப்டன் பொறுப்பை மோர்கனிடம் தந்தார் தினேஷ் கார்த்திக்

அபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை இயான் மோர்கனிடம் ஒப்படைத்தார் தினேஷ் கார்த்திக்.கொல்கத்தா அணியின் கேப்டனாக 2018 சீசன் இடையில்  டிகே பொறுப்பேற்றார். அந்த சீசனில் 3வது இடம் பிடித்த கொல்கத்தா பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து 2019 சீசனிலும் அவரது தலைமையில் விளையாடிய கொல்கத்தா அணி 5வது இடம்தான் பிடித்தது. நடப்புத் தொடரில் முதல் 7 லீக் போட்டிகளில் அந்த அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த கார்த்திக், எஞ்சிய போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை இயான் மோர்கனிடம் ஒப்படைத்தார். அதனை நேற்று பிற்பகல் கொல்கத்தா அணி நிர்வாகமும் உறுதி செய்தது. இது குறித்து டிகே கூறுகையில், ‘கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதின் மூலம் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் முழு கவனம் செலுத்தப் போகிறேன்’ என்றார்.கேகேஆர் அணியின் புதிய கேப்டன் மோர்கன் இப்போது இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக இருக்கிறார். கடந்த ஆண்டு இவரது தலைமையில்தான் இங்கிலாந்து  உலக கோப்பையை கைப்பற்றியது.

Related Stories: