போலி டாக்டர்களை அனுமதிப்பது சமூகத்தில் தீமையை ஏற்படுத்தும்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: போலி டாக்டர்களை அனுமதிப்பது சமூகத்தில் தீமையை ஏற்படுத்தும் என ஐகோர்ட் கிளை அதிரடியாக கூறியுள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 2018ல் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். தனது மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்றக் கோரி ஜெயபாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.  இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெறுவதாக கூறப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் நீதிமன்றத்தில் போலி சான்றிதழ்களை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவரது மனுவை திரும்ப பெற அனுமதிக்க முடியாது. இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலி டாக்டர்கள் மற்றும் போலி வக்கீல்களை அனுமதிப்பது சமூகத்தில் பெரிய தீமையை ஏற்படுத்தும் எனக் கூறி விசாரணையை நவ.19க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: