திருமணமான பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் கூட மாமியாரின் வீட்டில் வாழ உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: திருமணமான பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் கூட மாமியாரின் வீட்டில் வாழ உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஒரு பெண் தனது கணவரிடமிருந்து பிரிந்திருந்தாலும் அவர்களின் குடும்ப வீட்டில் வாழ உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாமனார் அல்லது மாமியாருக்கு சொந்தமானதாக அந்த வீடு இருந்து அதில் கணவருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லையென்றாலும் கூட அந்த பெண்ணுக்கு அவ்வீட்டில் வசிக்க உரிமை உண்டு என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறைச் சட்டம், 2005-ன் கீழ், திருமணமான தம்பதியினரில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தாலும்கூட, மருமகளுக்கு அவரது மாமியார் வீட்டில் வாழ உரிமை உண்டு. அவர் மீது ஒரு சிவில் வழக்கு பதிவு செய்யப்படும்போது கூட இது பரிசீலிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றமும், அச்சமூகத்தின் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் திறனைப் பொறுத்தது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. டெல்லியில் வசிக்கும் 76 வயதான அஹுஜா என்பவர் தனது வீடு, தனக்கு சொந்தமானது என்றும், தனது மகனுக்கோ அல்லது மருமகளுக்கோ அதில் எந்தவொரு உரிமையும் இல்லை என்றும், மருமகளை அந்த வளாகத்தை காலி செய்ய சொல்லிய உயர்நீதிமன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.

Related Stories: