பாட்னா, :கொரோனா தொற்று பாதிப்பால் பீகார் மாநில அமைச்சர் கபில் தேவ் காமத் நேற்றிரவு காலமானார்.
பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமாரின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவர் கபில் தேவ் காமத் (69). இவர் மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த முறை தேர்தலில் அவரது மருமகள் மீனா காமத்தை தனது வேட்பாளராக அறிவித்தது. இந்நிலையில், அமைச்சர் கபில் தேவ் காமத்துக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் இறந்தார். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டார்.