அமெரிக்க, ரஷ்யா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 மணி நேரத்தில் சென்று சாதனை: மாற்றுப் பாதையில் விறுவிறு பயணம்

மாஸ்கோ: அமெரிக்கா, ரஷ்யா விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி புறப்பட்ட விண்கலம், மாற்றுப் பாதையில் பயணித்து முதல் முறையாக 3 மணி நேரத்தில் வெற்றிகரமாக அடைந்து சாதனை படைத்துள்ளது.

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கியிருந்து, விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவின், ‘ரோஸ்கோஸ்மோஸ்’ விண்வெளி மையத்தை சேர்ந்த செர்ஜி ரைஜிகோவ், செர்ஜி குட் ஸ்வெர்கோவ் மற்றும் நாசாவின் கேத் ரூபின்ஸ் ஆகியோர் ரஷ்யாவின், ‘சோயுஸ் எம்எஸ்-17’ விண்கலம் மூலம் நேற்று புறப்பட்டனர்.

இந்த விண்கலம் ஏவப்பட்ட சிறிது நேரத்தில், வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்தது. இதில், வழக்கத்துக்கு மாறாக 2 சுற்றுப் பாதைகளின் வழியாக, மாற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. இதன் காரணமாக, முதல் முறையாக 3 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அது சென்று அடைந்தது. இதற்கு முன்பு விண்வெளி ஆய்வு மையத்தை அடைய இதை விட இரண்டு மடங்கு நேரம் செலவானது. இவர்கள் கடந்த ஏப்ரல் முதல் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள நாசா கமாண்டர் கிறிஸ் கேசிடி, ரோஸ்கோஸ்மாஸ் வீரர்கள் அனடோலி இவானிஷின், இவான் வேக்னருடன் ஒரு வாரம் பணியாற்றி விட்டு பூமிக்கு திரும்ப உள்ளனர். அதற்கு முன்பாக, விண்வெளியில் திசுக்கள் வளர்ச்சி, மரபணு மாற்ற தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சிகளை இவர்கள் செய்ய உள்ளனர்.

* வேகமாக சென்றது எப்படி?

பூமியில் இருந்து 418 கிமீ தூரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: