அந்தியூர் அருகே கிரானைட் கற்கள் கடத்தல்-லாரி பறிமுதல்

அந்தியூர், :  அந்தியூர் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கடத்தப்பட்ட கிரானைட் கற்களை கனிம வளத்துறை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாவட்ட கனிம  வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டு வருகிறார்கள். அந்தியூர் தீயணைப்பு நிலையம் அருகில் உதவி புவியியலாளர் ஜெகதீஷ்,  கனிமவள தனி வருவாய்  ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் அத்தாணி ரோட்டிலிருந்து  கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை  நடத்தினர்.

அப்போது  அனுமதியின்றி, அந்தியூர் தனியார் கிரானைட் நிறுவனத்திலிருந்து நாமக்கல்  மாவட்டம் குமாரபாளையத்திற்கு  கிரானைட் கற்களை கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து 9 கிரானைட் பாறைகளுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். அதன் பின்பு கனிமவள அதிகாரிகள்  அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஒப்படைத்தனர். மேலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை  சேர்ந்த லாரி டிரைவர் தியாகராஜனிடம் அதிகாரிகள் விசாரணை  நடத்தினர். இதைத்தொடர்ந்து  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அந்தியூர் ேபாலீசில் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: