அசர்பைஜான்-அர்மீனியா போர் நிறுத்த ஒப்பந்தம்

மாஸ்கோ: முன்னாள் சோவியத் நாடுகளான அசர்பைஜான், அர்மீனியா இடையே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்ச்சைக்குரிய  நாகர்னோ-கராபாக் பகுதி தொடர்பாக யுத்தம் நீடித்து வருகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கி நடந்த சண்டையின் போது, இரு தரப்பிலும் 2  ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் அழைப்பை ஏற்று அசர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ்,  அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தனர்.  அதன்படி,  இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும்  நேற்று  10 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், போர் நிறுத்தம் செய்து கொள்ள உடன்பாடு எட்டப்பட்டது.

Related Stories: