‘மழையால் சேதமடைந்த வீட்டை கட்டிக்கொடுங்க’ அதிமுக எம்எல்ஏ காலில் விழுந்து பெண் தூய்மை பணியாளர் கதறல்: இளையான்குடி அருகே பரபரப்பு

இளையான்குடி:  இளையான்குடி அருகே சேதமடைந்த வீட்டை கட்டி கொடுக்கக்கோரி அதிமுக எம்எல்ஏ நாகராஜன், காலில் விழுந்து பெண் தூய்மை  பணியாளர் கதறியழுத சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை  மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன் துவக்கி வைத்தார். அப்போது  சூராணம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் ஜெயா என்பவர், ‘‘3 நாட்களுக்கு முன் பெய்த கனமழையில் வீடு சேதமடைந்து  விட்டது. அரசு அதிகாரிகள் இதுவரை வந்து பார்க்கவில்லை’’ என எம்எல்ஏவிடம் கதறி அழுதார். இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று எம்எல்ஏ  நாகராஜன் பார்வையிட்டார்.

அப்போது, உடல்நிலை சரியில்லாத கணவரும், மகனும் தூய்மை பணியாளராக வேலை செய்வதாகவும்,  ஒரு மகள், வயதான அம்மா ஆகியோர் இந்த  வீட்டில்தான் இருக்கிறோம் என்று கூறிய ஜெயா, ‘‘சேதமடைந்த வீட்டை கட்டித்தர உதவி செய்ய வேண்டும்’’ என்று கூறி எம்எல்ஏ நாகராஜனின்  காலில் விழுந்து கதறியழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ நாகராஜன், உடனடியாக அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று  தாசில்தார் ரமேஷ், ஆணையாளர் பர்னபாஸ்  அந்தோணி ஆகியோரிடம் வலியுறுத்தினார்.

Related Stories: