ஊட்டி: ஊட்டி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா ேநற்று நடந்தது. இதில் கலெக்டர் பங்கேற்று விற்பனையை துவக்கி வைத்தார். தீபாவளி விற்பனைக்காக மென் பட்டு, கோரா காட்டன், பருத்தி சேலைகள்,போர்வை,படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆயத்த ஆடைகள், சுடிதார் ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.