சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை எனில் அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை எனில் அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பட்டுக்கோட்டையை சேர்ந்த தங்கவேல் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைனில் விற்கப்படும் மணல் இடைத்தரகர்களால் கூடுதல் விலைக்கே மக்களை சென்றடைகிறது. இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி சாதாரண நபருக்கு உரிய விலையில் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: