வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை: விவசாயிகள் எங்கும் விளைபொருட்களை விற்கலாம்...நிர்மலா சீதாராமன் விளக்கம்.!!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.  அப்போது, வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சியே. விவசாயிகளின் உரிமைகளை காக்கவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.  ஆதாயம் கிடைக்கக் கூடிய வகையில் எங்கு வேண்டுமானாலும் விளை பொருட்களை விற்கலாம். மாநிலங்களுக்கு இடையே விளைப்பொருட்களை விற்கும் முறை மத்திய  அரசின் வசம்தான் உள்ளது.

வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை; உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் உள்ளது. விவசாயிகளுக்கு வேளாண் திருத்த சட்டத்தால் நஷ்டம் ஏற்படாது. விளைவித்த  பொருள்களை விற்பது குறித்து விவசாயிகள் தீர்மானிக்கலாம். குறைந்தபட்ச ஆதார விலையில் விற்கலாம்; யாரிடம் விற்பது என்று விவசாயிகளே முடிவு செய்யலாம்.  வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. வேறு மாநிலங்களுக்கு விளைபொருட்களை கொண்டு சென்று விற்க வழிவகை செய்கிறது  புதிய சட்டம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 8 சதவீத வரி இனி இருக்காது என்றும் தெரிவித்தார்.

Related Stories: