பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் சிலைகளுக்கு அ.தி.மு.க. கட்சி கொடி நிறத்தில் வர்ணம் பூசியதால் சர்ச்சை

 சத்தியமங்கலம்: பவானிசாகரில் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள சிலைகளுக்கு அ.தி.மு.க. கட்சி கொடி நிறத்தில் வர்ணம் பூசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில்  ரூ.7 கோடி செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2018ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள காராச்சிக்கொரையில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், பழங்குடியினரின் வாழ்க்கை முறைகள், உணவு பழக்க வழக்கங்கள், அவர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகள், வனவிலங்குகளுடன் பழங்குடியினருக்கு உள்ள தொடர்பு மற்றும் பழங்குடியினர் வாழ்ந்து வரும் வீடுகளின் மாதிரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட விளக்க கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு பழங்குடியினர் வசித்து வரும் வீடு மாதிரிகள் மற்றும் பழங்குடியினரின் தோற்றம் கொண்ட உருவச் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பழங்குடியினரின் உருவச்சிலைகளில் அ.தி.மு.க. கட்சி கொடி நிறமுள்ள சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. கட்சிக்கொடி நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட சிலைகளை பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட உள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Related Stories: