இன்று காந்தி ஜெயந்தி: காந்திக்கு கோயில் கட்டி வழிபடும் கிராமம்

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது காமயகவுண்டன்பட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த பரமசிவம், முன்னாள் எம்பி சக்திவடிவேல், முன்னாள் எம்எல்ஏ பாண்டியராஜ் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட தியாகிகள், சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு இந்த கிராமத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களின் நினைவாக 1985ல் கிராமத்தில் காந்திக்கு கோயில் கட்டி சிலை அமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக தியாகி பாண்டியராஜ் தலைமையில் குழு அமைத்து, அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்புடன் கம்பம் - காமயகவுண்டன்பட்டி சாலையில் மகாத்மா காந்தியடிகளுக்கு கோயில் கட்டி, வெண்கலச்சிலை நிறுவப்பட்டது.

இதில், இக்கிராமத்தை சேர்ந்த தியாகிகளின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன. அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன், 1985, டிச. 29ல் கோயிலை திறந்து வைத்தார். அன்று முதல் இன்று வரை 35 ஆண்டுகளாக கிராம மக்கள் காந்தியடிகளை தெய்வமாக வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகள் பிறந்த தினம் மற்றும் தேசத்தலைவர்களின் பிறந்த தினங்களில் காந்தி கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிங்கப்படுகிறது.

Related Stories: