இயற்கையோடு ஒன்றி வாழ்வதால் கொரோனா நுழையாத குமரி மலை கிராமம்

நாகர்கோவில்: இயற்கையோடு மலைவாழ் மக்கள் வாழ்ந்து வரும் கிராமம் கீரிப்பாறை. இந்த மலை கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டவர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் உலகில்  கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல் இன்று வரை இந்த மலைவாழ் கிராமத்தில் வாழ்ந்து வரும் பெரியவர் முதல் சிறிய குழந்தை வரை யாருக்கும்  கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இது  மாவட்ட சுகாதார துறையினர் முதல் அனைத்து தரப்பு மக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தங்களுக்கு கொரோனா தொற்று உட்பட எந்தவிதமான தொற்று நோயும் இதுவரை வந்ததில்லை என்று அப்பகுதி மக்கள் கூறினர். அவர்கள் மேலும் கூறுகையில், பிறந்தது முதல் வனத்தில் உள்ள பல விதமான மூலிகை மரங்களின் சுத்தமான  காற்றை சுவாசித்து, காட்டாற்றில் குளிக்கிறோம். சுக்கு, ஏலம், கிராம்பு என பல விதமான மூலிகை தண்ணீரை காலம் காலமாக குடித்து வருகிறோம். இதனால் எங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி இயற்கையாக  உள்ளது. ஆகையால் தான் எங்கள் பகுதியில் ஒருவருக்கு கூட கொரோனா  தொற்று பாதிப்பு வரவில்லை என்றனர்.

எங்களை வாழ விடுங்கள்

கிராம மக்கள் கூறுகையில், இயற்கையில் வாழ்வதால் நாங்கள் ஆரோக்கியமாக உள்ளோம். ஆகவே இயற்கையோடு இயற்கையாக வாழும் எங்களை வனத்திலேயே வாழ விடுங்கள். வன பாதுகாப்பு சட்டம் சூழியல் மண்டல சட்டம், புலிகள் காப்பக பகுதி என பல சட்டங்களை போட்டு, கட்டுப்பாடுகளை விதித்து இந்த வனத்தை விட்டு துரத்த மத்திய மாநில அரசுகள் முயன்று வருகின்றன. வனத்தை விட்டு வெளியெற்றினால் எங்களால் வாழ முடியாது. ஆகையால் எங்களை எங்கள் வனத்திலேயே வாழ விடுங்கள் என்று தெரிவித்தனர்.

Related Stories: