பழமையான கோயில்களில் உள்ள சிலைகளை உடைத்து புதையல் எடுக்க முயன்ற 8 பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பழமையான இந்து, கோயிலில் உள்ள சிலைகள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. சித்தூர் மாவட்டம், கங்காதர நெல்லூரில் உள்ள சிவன் கோயிலில் நந்தி சிலை கடந்த  27ம் தேதி 2ஆக உடைக்கப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க, சி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவை நேற்று 8 பேர் கொண்ட கும்பலை  கைது செய்தன. மேலும், அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் கர்நாடக மாநிலம், தும்கூரை சேர்ந்த மணிகண்ட, டிப்டூரை சேர்ந்த நவீன், விகாஸ் சிக்கமங்களூரை சேர்ந்த கிரண்குமார், பீஜாப்பூரை சேர்ந்த அசோக்குமார், ஆந்திராவில், சித்தூர் மாவட்டம் ஐரலாவை சேர்ந்த பெத்தப்பா, குப்பம் நகரை சேர்ந்த சரவணா, கர்னூலை சேர்ந்த சோமசேகர் என்பதும், இவர்கள் ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள பழமையான கோயில்களில் ஆய்வு நடத்தி கோயில்கள் வளாகத்துக்குள் உள்ள சிலைகளை சேதப்படுத்தி புதையல் எடுக்க முயன்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து 8 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: