கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு தள்ளுபடி

அயோத்தியில் ராமர் அவதரித்ததாக இந்துக்கள் நம்புவதைப் போல, உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் அவதரித்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ண ஜென்மபூமியில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயில் அருகே ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியில் இக்கோயிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டுதான் மசூதி கட்டப்பட்டதாகவும், அதனால் மசூதியை இடித்து அந்த இடத்தை கிருஷ்ணர் கோயிலுக்கு வழங்கவும் கோரி மதுரா சிவில் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. அயோத்தி வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கிருஷ்ண ஜென்மபூமி வழக்கை மதுரா நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

எந்தவொரு மத இடத்திலும் 1947ம் ஆண்டின் நிலையை மாற்றும் வழக்கை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். இந்த சட்டத்தில் அயோத்தி வழக்குக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்ட அதே தினத்தில் கிருஷ்ண ஜென்மபூமி விவகாரத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Related Stories: