பாஜ, அதிமுக அரசுகளுக்கு சாவு மணி அடிக்கும் போராட்டம்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னை: வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: வேளாண் மசோதாவுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம், பாஜ அரசுக்கும், அதிமுக அரசுக்கும் சாவு மணி அடிப்பதாகும். பாஜ அரசு கடந்த 21ம் தேதிதான் விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் தமிழக அரசு கடந்த 17ம் தேதியே ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி என்று சொல்வதைவிட மோடி ஆட்சி என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த மசோதாவால் விவசாயிகள் மட்டுமல்ல, சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். முதல்வர் பழனிச்சாமிக்கு தைரியம் இருந்தால் ஒரே மேடையில் எங்களுடன் விவாதிக்க வாருங்கள், நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்று நடக்கும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோடிக்கு யார் காவடி தூக்குவது என்ற போட்டி நிலவி வருகிறது என்றார்.

Related Stories: