அபுதாபி: நடப்பு சீசனில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று களம் காணுகின்றன.
அபுதாபியில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடு உள்ளன. இரண்டு அணிகளும் இதுவரை தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளன. கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் மும்பையிடம் 49ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதேபோல் ஐதராபாத் அணியும் பெங்களூர் அணியிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது.