நியாயமான, சுதந்திரமான அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்: வெள்ளை மாளிகை விளக்கம்

வாஷிங்டன்: ‘நியாயமான, சுதந்திரமான தேர்தல் முடிவை அதிபர் டிரம்ப் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்,’ என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது. அதில், ‘தபால் ஓட்டு முறையில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளதால், அதிபர் தேர்தலில் ஒருவேளை தோல்வி அடைந்தால், உச்ச நீதிமன்றத்தை நாடுவேன்’ என அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தலில் அவர் தோற்று விட்டால், வெற்றி பெறும் ஜோ பிடெனிடம் ஆட்சியை ஒப்படைக்க மாட்டார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் ஊடக செயலாளர் கேலெய்க் மெக்என்னானி  நேற்று அளித்த பேட்டியின்போது, ‘தேர்தலில் டிரம்ப் தோற்றால், ஆட்சி பரிமாற்றம் அமைதியான முறையில் நடக்காதா?’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மெக்என்னானி, ‘‘நியாயமான, சுதந்திரமான அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் நிச்சயம் ஏற்றுக் கொள்வார். ஆனால், இந்த கேள்வியை நீங்கள் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரிடம் கேட்பது தான் பொருத்தமாக இருக்கும். அவர்கள்தான் ‘அதிபர் டிரம்ப் வென்றால் அந்த தேர்தலின் முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம்’ என ஏற்கனவே கூறியவர்கள்,’’ என பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories:

>