தொழில்நுட்பக் கோளாறால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் : அண்ணா பல்கலை.அறிவிப்பு!!!

சென்னை:  தொழில்நுட்ப பிரச்சனையால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற வேண்டிய இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் கொரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மாணவர்கள் முதல் முறையாக ஆன்லைனில் தேர்வை சந்திப்பதால், அதற்கு முன்னோட்டமாக மாதிரி தேர்வு கடந்த 19, 20 மற்றும் 21ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே இருமுறை நடைபெற்ற மாதிரி தேர்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து நேற்று ஆன்லைன் தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 90 சதவிகித மாணவர்கள் ஆன்லைனில் நடைபெற்ற இறுதி செமஸ்டர் தேர்வை தொழில்நுட்ப சிக்கலின்றி எழுதியுள்ளனர். இதனிடையே தொழில்நுட்ப கோளாறு மற்றும் இன்டர்நெட் சிக்கல் தொடர்பாக ஒரு சில மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கி தவித்த மாணவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: