சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 10 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75. தற்போது 54 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 22 இடங்கள் காலி. இந்த நிலையில், பதவி மூப்பு அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பிரிவில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சென்னை உயர் நீதிமன்றம் மூத்த மாவட்ட நீதிபதிகள் பட்டியலை உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. அந்த பட்டியலில் மாவட்ட நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாத்திகுமார் சுகுமார குருப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ்செல்வி டி.வளையாம்பாளையம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.