தலைமையக துணை மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு: மின்வாரியம் திட்டம்

சென்னை: தமிழகத்தில் வீடு, கடை, தொழிற்சாலை, விவசாயம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுமார் 3 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரத்தை அனல், நீர், காற்றாலை, சூரியசக்தி ேபான்றவற்றின் மூலமாக மின்வாரியம் தயாரிக்கிறது. பிறகு அங்கிருந்து துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இங்கு அழுத்தம் குறைக்கப்பட்டு இணைப்புகளுக்கு விநியோகம் செய்யப்படும். எனவே மின் விநியோகத்தில் துணை மின்நிலையங்களின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒருசில இடங்களில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடமும் விநியோகம் செய்யப்படும் பகுதிக்கும் நீண்ட தூர இடைவெளி உள்ளது.

இது மின்இழப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்தும் விதமாகவும், ஆண்டுதோறும் அதிகரித்து வரும் புதிய மின்இணைப்புகளை கருத்தில் கொண்டும் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அந்தவகையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் 230/33 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதை ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கவுள்ளது.

Related Stories: